எல்லை தாண்டி மீன்படித்ததாக 31 இந்திய மீனவர்கள் கைது... பாக். கடற்படை அட்டூழியம்!!

Published : Feb 20, 2022, 10:30 PM IST
எல்லை தாண்டி மீன்படித்ததாக 31 இந்திய மீனவர்கள் கைது... பாக். கடற்படை அட்டூழியம்!!

சுருக்கம்

இந்திய மீனவர்கள் 31 பேரையும் அவர்களின் படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 

இந்திய மீனவர்கள் 31 பேரையும் அவர்களின் படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்படித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊடுருவிய படகுகளை நேற்று முன்தினம் பறிமுதல் செய்ததாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. படகுகள் அனைத்தும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்காக கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதியில் எல்லை தாண்டி வருவதாக பாகிஸ்தானும் இந்தியாவும் அடிக்கடி இது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட கைதிகளின் பட்டியலின் படி, பாகிஸ்தானில் 628 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதில் 577 பேர் மீனவர்கள் ஆவர். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடற்பகுதியில் சில இடங்களில் கடல் எல்லையை அறிய முடியாததால் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளது.

பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊடுருவிய படகுகளை கடந்த 18ம் தேதி பறிமுதல் செய்ததாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. படகுகள் அனைத்தும் தொடர்ந்து சட்ட நடவடிக்கைக்காக கராச்சிக்கு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே கடற்பகுதியில் சில இடங்களில் கடல் எல்லையை அறிய முடியாததால் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் இண்டிகோ விமானப் பயணிகளுக்கு ஆச்சரியம்!
நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!