பேருந்துகளில் சத்தமாக போன் பேசவோ, பாடல் கேட்கவோ தடை... மீறினால் நடவடிக்கை... அரசு அதிரடி!!

By Narendran S  |  First Published Feb 20, 2022, 7:24 PM IST

பேருந்துகளில் சத்தமாக போன் பேசவோ, பாடல் கேட்கவோ தடை விதித்து கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 


பேருந்துகளில் சத்தமாக போன் பேசவோ, பாடல் கேட்கவோ தடை விதித்து கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு காலத்தில் பேருந்துகளில் நடத்துநர் வைக்கும் பாட்டுகளுக்கு மவுசு அதிகம். ஆனால் இன்றோ தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளது. இதனால் பயணிகள் தங்களுக்குப் பிடித்த பாடலை தங்களது போன்களிலேயே வைத்து கேட்டுவிடுகின்றனர். இதுஒருபுறம் என்றால் சக பயணிகளிடம் பேசுவதும் உறவு வளர்த்துக் கொள்வதும் அரிதாகிவிட்டது.  இவ்வாறு பயணிகள் போன்களில் பாட்டு கேட்கும்போது அவர்களுக்கு சந்தோஷம் தான். ஆனால் சக பயணிகளுக்கு தான் பிரச்சினையோ பிரச்சினை. ஒரு பயணி கேட்கும் பாடல் அருகில் அமர்ந்திருந்தவருக்கும் பிடித்திருந்தால் பிரச்சினை இல்லை.

Tap to resize

Latest Videos

ஆனால் அவர்களுக்குப் பிடிக்காத பாடலை சத்தமாகக் கேட்பதும், காமெடி வீடியோக்கள் பார்த்து சிரிப்பதும் பக்கத்தில் இருப்பவருக்கு மிகுந்த எரிச்சலை தரும். அவர்களின் நடவடிக்கையே ஒருவித முகச்சுளிப்பை அளிக்கும். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் தான்தோன்றித்தனமாக பேருந்துகளில் பாடல்களையும் வீடியோக்களையும் ஒலிக்கவிடுவார்கள். இதனால் பாதிக்கப்பட்ட கர்நாடாகவைச் சேர்ந்த நபர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமோ, பேருந்து நடத்துநர் அதிக ஒலியில் பாடல்களை இசைக்க வேண்டாம் என்றும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்றும் பயணிகளிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனால் அதை மதிக்காமல் பாடல்களை இசைத்தால் அந்தப் பயணியை பாதி வழியில் இறக்கிவிடலாம் என உத்தரவிட்டது. இச்சூழலில் கேரள அரசு போக்குவரத்துக் கழகமும் இம்மாதிரியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பேருந்துகளில் மொபைல் போன்களில் சத்தமாகப் பேசுவது, மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பாடல், வீடியோ காட்சிகளை சத்தமாக பார்ப்பது தடைசெய்யப்படுவதாக அறிவித்துள்ளது. பயணிகளிடமிருந்து தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பேருந்துகளில் இவ்வாறு பயணிகள் நடந்துகொள்வதால், சகப் பயணிகள் அசௌகரியமாக உணர்கிறார்கள். அதனால் தான் இந்த அதிரடி நடவடிக்கை என கூறப்பட்டுள்ளது. 

click me!