
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வழிபாடுகள் மட்டுமின்றி, பல்வேறு சிறப்பு பூஜைகளும் நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.இந்த சேவைகளும் தனித்த சீட்டுகளும் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 17 ஆம் நடைபெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தான அறகட்டளை கூட்டத்தில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.அதன்படி வஸ்தர அலங்கார சேவைகளுக்கான கட்டணம் 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
திருமண உற்சவ சேவைக்கான கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாய் ஆக உயர்கிறது.சுப்ரபாத தரிசன கட்டணம் 240 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.தோமாலா சேவை அர்ச்சனை கட்டணத்தை 440 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.புதிய கட்டணங்கள் அடுத்த ஒரு சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் தற்போது 120 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வரும் சேவை 2 ஆயிரம் ரூபாயாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதேபோல் 240 ரூபாய்க்கு வழங்கப்படும் சேவை 2000 ரூபாய் ஆகவும், விஐபி தரிசன டிக்கெட் தற்போது 500 ரூபாயாக இருக்கும் நிலையில் அதை ஆயிரம் ரூபாய் ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது சுப்ரபாதம் டிக்கெட் ஒன்றின் விலை 240 ரூபாயாக இருக்கும் நிலையில் அது 2000 ரூபாய் ஆகவும், தோமாலை மற்றும் அர்ச்சனை ஆகிய கட்டண சேவை டிக்கெட்டுகள் தற்போது 440 ரூபாயாக இருக்கும் நிலையில் அவற்றை 5000 ரூபாய் ஆக மாற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.