மோடியுடன் மோதி பார்க்க தயாராகும் சிவசேனா... கூட்டணியில் திடீர் குழப்பம்..!

By vinoth kumarFirst Published Jun 19, 2019, 6:03 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் பாஜவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த முதல்வராக சிவசேனாவை சேர்ந்த மண்ணின் மைந்தர் ஒருவர்தான் பதவியேற்பார் என்று அக்கட்சி கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவும், சிவசேனா கட்சியும் கூட்டணியில் உள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 48 தொகுதிகளில் பாஜக 23 இடங்களிலும், விசவேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாமானாவில் அக்கட்சியின் 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு எழுதப்பட்ட தலையங்கத்தில் மகாராஷ்டிராவில் பாஜகவோடு சேர்ந்தே தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் மாநிலம் முழுக்க எங்களது கட்சி வளார்ந்துள்ளது. இந்த வளர்ச்சி மிக நிலையானதாகவும் உள்ளது. தேர்தல் முடிந்ததும், மாநிலம் முழுக்க காவி மயமாகும் போது, மாநில முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார் என தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

click me!