சிவசேனாவை நேரம் பார்த்து காலை வாரி விட்ட சரத் பவார்... குஷியில் துள்ளி குதிக்கும் பாஜக..!

By vinoth kumarFirst Published Nov 6, 2019, 2:53 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவும் சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும். மக்கள் எங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே வாக்களித்துள்ளார்கள். அந்தவகையில் நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கப் போதவில்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே நாங்கள் செயல்படுவோம் என்று சரத் பவார் அதிரடியாக அறிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக- சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், அதிகார பகிர்வு விஷயத்தில் உடன்பாடு எட்டப்படாததால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் 50-50 பார்முலா, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பதில் சிவசேனா உறுதியாக உள்ளது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக விரும்பவில்லை. அதேவேளையில், சிவசேனாவில் இருந்து முதல்வராக ஒருவர் வருவதைத்தான் விரும்புகிறார்கள் என சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே பாஜகவின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதனால், பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் "மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவும் சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும். மக்கள் எங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே வாக்களித்துள்ளார்கள். அந்தவகையில் நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றார். 

சிவசேனாவும் பாஜகவும் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் நாங்கள் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால், நாளை மீண்டும் பாஜகவுடன் இணக்கமாக சிவசேனா செல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால், நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே செயல்படுகிறோம் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

click me!