டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் பீதி அடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் பீதி அடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரை நோக்கி சென்ற ஏ.ஐ.-302 எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது. இதனால் விமானத்தில் பயணித்த 7 பேருக்கு லேசான காயம் அடைந்துள்ளனர். உடனடியாக விமானத்திலேயே அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது.
விமானம் சிட்னி விமான நிலையத்தை அடைந்ததும், காயம் அடைந்த பயணிகளுக்கு மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக ஏர் இந்தியா விமானத்தின் மேலாளர் கூறியுள்ளார். ஆனால், 3 பயணிகளுக்கு மட்டுமே மருத்துவ உதவி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் மற்றவர்கள் யாரும் மருத்துவமனையில் சேரவேண்டிய அவசியம ஏற்படவில்லை எனவும் விமான போக்குவரத்து இயக்ககம் கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தைப் பற்றி ஏர் இந்தியா விமான விமானம் சார்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த மாதத் தொடக்கத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், நடுவானில் பயணி ஒருவரை தேள் கொட்டியது. வலியால் துடித்த அவருக்கு விமானம் தரையிறங்கிய பின் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்ற 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பாம்பு இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடகாவில் 2-3 நாட்களில் புதிய அமைச்சரவை: காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உறுதி