கர்நாடகாவில் 2-3 நாட்களில் புதிய அமைச்சரவை: காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உறுதி

By SG Balan  |  First Published May 17, 2023, 3:26 PM IST

காங்கிரஸ் கட்சி இன்னும் 2-3 நாட்களில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவையை அமைக்கும் என அக்கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்தபோதும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

இருவரும் விட்டுக்கொடுக்காமல் முதல்வர் பதவிக்காக டெல்லியில் உள்ள கட்சித் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் சித்தராமையா, டி.கே. சிவகுமார் இருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

கர்நாடக முதல்வராகும் சித்தராமையா.. துணை முதல்வராகிறார் டி.கே. சிவகுமார் - டெல்லி வட்டாரங்கள் தகவல்

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்றோ நாளையோ புதிய முதல்வர் குறித்தை அறிவிப்பு வெளியிடலாம் எனக் கூறும் அவர், "தற்போது கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் முடிவெடுக்கும்போது அறிவிப்போம். அடுத்த 48-72 மணிநேரத்தில், கர்நாடகாவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வராவை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் கோரத் தொடங்கியுள்ளனர். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் என அந்தச் சமூகத்தின் அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை முதல்வரை அறிவிக்காதது குறித்து பாஜக காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளது.

துங்கநாத் கோயில்: உலகின் மிக உயரமான சிவன் கோயில் ஏன் 6 - 10 டிகிரி சாய்ந்துள்ளது?

click me!