கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

By Manikanda PrabuFirst Published Nov 14, 2023, 10:24 AM IST
Highlights

கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கிடையே தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனப்பகுதிகள் மற்றும் மாநில எல்லை சோதனை சாவடிகளில் அம்மாநில போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக அம்மாநில நக்சல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

தீபாவளி தோறும் உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை: திமுக அரசை வறுத்தெடுக்கும் அண்ணாமலை

இந்த சண்டையில் மாவோயிஸ்ட்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். மேலும், 3 பேர் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கிடையே மாவோயிஸ்ட்கள் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போலீசார் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!