உச்ச நீதிமன்றத்திடன் குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் பெற வேண்டும் என்றும் அதுவரை தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்திடன் குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் பெற வேண்டும் என்றும் அதுவரை தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன் கவனமாகவும் முழுமையாகவும் பரிசீலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
undefined
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது. தேர்தல் பத்திரத் தகவல்களை மார்ச் 12ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தேர்தல் பத்திர விவரங்களை அனுப்பியது ஸ்டேட் வங்கி! உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?
தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பின் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அளித்த தீர்ப்பில் மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், மார்ச் 4ஆம் தேதி எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கோரியது. நன்கொடையாளர் விவரங்களையும் அவற்றைப் பணமாக்கிய கட்சிகளின் விவரங்களையும் ஒப்பிடுவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறியது. 26 நாட்களில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கண்டித்த நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், பார் கவுன்சில் தலைவர் தீர்ப்பை நிறுத்தி வைக்க குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருப்பது தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீட்டைத் தள்ளி வைப்பதற்கு பாஜக கையாளும் உத்தி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கவும் மறுபரிசீலனை செய்யவும் கோரலாம் என்றும் அதுவரை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வாய்ப்பு உள்ளது என்றும் சட்ட வல்லநர்கள் கூறுகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரொபதி முர்மு தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார். அவர் இந்தியா திரும்பியதும் இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் கொடுத்த பூஸ்ட்! இயக்குநர் மணிரத்னம் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?