மார்க்-ஷீட்டில் சல்மான் கான் படம்... அதிர்ச்சி அடைந்த மாணவர்! அசடு வழிந்த பல்கலைக் கழகம்!

Asianet News Tamil  
Published : Nov 22, 2017, 07:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
மார்க்-ஷீட்டில் சல்மான் கான் படம்... அதிர்ச்சி அடைந்த மாணவர்! அசடு வழிந்த பல்கலைக் கழகம்!

சுருக்கம்

Salman Khan gets a BA mark sheet from Agra university with just 35 percent marks

தேர்வு எழுதிய மாணவர் ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட மார்க் ஷீட்டை எடுத்துப் பார்த்தார். அதில் தன் புகைப்படத்துக்கு பதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் படம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள அம்ரதா சிங் நினைவுக் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் முதலாண்டு மாணவர் ஒருவருக்கு ஆக்ரா பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழில் இந்தி நடிகர் சல்மான்கான் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இப்படி, சல்மான் கான் படம் இடம்பெற  மார்க் ஷீட் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சல்மான் கான் 35% மதிப்பெண்களுடன் பிஏ மார்க்‌ஷீட் ஆக்ரா பல்கலையில் இருந்து பெற்றுள்ளார் என்று பல செய்தித் தளங்களிலும் செய்திகள் வெளியாயின. இதைக் கண்டு ஆக்ரா பல்கலை அசடு வழிந்தது. இதனால் இந்த விவகாரகம் குறித்து பல்கலையில் தொடர்பு கொண்டு ஊடகத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஆக்ரா டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் டாக்டர் கிரிஜா சங்கர் கூறியபோது, இது தொடர்பாக புகார் எதுவும் பெறப் படவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டால் நாங்கள் நிச்சயம்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

அந்த மாணவருக்கு வழங்கப்பட்ட மார்க்‌ஷீட்டில் அந்த மாணவரின் பதிவு எண் சரியாக உள்ளது. ஆனால் புகைப்பட பகுதியில் சல்மான் கான் படம் இடம்பெற்றுள்ளது. இதில் பல்கலைக்கழகத்தின் தவறு எதுவும் இல்லை, நாங்கள் எங்களிடம் வழங்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்ததில், அவை அனைத்தும் சரியாகவே உள்ளன என்று கூறியுள்ளார் கிரிஜா சங்கர். மேலும், பொதுவாக, அவரவர் போட்டோக்களை ஒட்டி,  மாணவர்கள்தான் விண்ணப்பத்தை அளிப்பார்கள். அந்த விண்ணப்பத்தை  கல்லூரி முதல்வர்தான் சரிபார்த்து பல்கலைக்கு அனுப்புவார். அதனை கண்காணிப்பார்கள் பார்வையிடுவார் எனக் கூறியுள்ள கிரிஜா சங்கர், இது மாணவரின் செயலாக இருக்கக் கூடும் என்பது போல் விலகிக் கொண்டிருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

Grok AI வச்சு இப்படியா பண்ணுவீங்க? எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு விதித்த 72 மணி நேர கெடு!
பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!