
புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 8ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் போதிய பணம் கிடைக்காமல் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கும் அல்லல்பட்டனர்.
எனவே சுங்ககட்டணம் ரத்து, விமான நிலையங்களில் இலவச பார்க்கிங், வீடு மற்றும் கார் கடன் கட்டுவதற்கு கால அவகாசம் உள்ளிட்டவைகள் மத்திய அரசு அறிவித்தது.
இந்தநிலையில், டெல்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு டிசம்பர் 31ம் தேதி வரை சேவைகட்டணம் கிடையாது என்றும், ஏ.டி.எம்களிலும், கடைகளிலும் டெபிட் கார்டை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளளலாம் அதற்கான சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.