யாரும் தப்ப முடியாது….. சக்தி கந்த தாஸ் கடும் எச்சரிக்கை

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 03:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
யாரும் தப்ப முடியாது…..  சக்தி கந்த தாஸ் கடும் எச்சரிக்கை

சுருக்கம்

கருப்பு பணத்தை பதுக்கி இருப்போர், வெள்ளையாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று மத்திய பொருளாதாரத்துறை செயலர் சக்தி கந்ததாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்ததில் இருந்து மக்கள் பணம் வங்கியில் பணம் எடுப்பதில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால், கருப்பு பணம் வைத்து இருப்போர் வெள்ளையாக மாற்ற பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அவர்களை தடுக்கவும் பல நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வந்தபோதிலும், தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய பொருளாதாரத்துறை செயலர் சக்தி கந்த தாஸ் நேற்று டுவிட்டரில் ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “ கருப்பு பணம் வைத்து இருப்போர், வெள்ளையாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவோர், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது.

இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை வருமான வரித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களை பின்தொடர்ந்து நடவடிக்ைககளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதை சமீபகாலமாக பார்த்து இருப்பீர்கள். அடுத்து வரும் நாட்களில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்''  என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?