பணத்தட்டுப்பாடு நீங்க 6 மாதம் ஆகுமாம் - சொல்கிறார் அருண் ஜெட்லி

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
பணத்தட்டுப்பாடு நீங்க 6 மாதம் ஆகுமாம் - சொல்கிறார் அருண் ஜெட்லி

சுருக்கம்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த, ‘ மேக் இன் ஒடிசா’ என்ற மாநாட்டில் அருண் ஜெட்லி கலந்துகொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துள்ளதால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி நாங்கள் அறிவோம். ஆனால், இது நாட்டில் நீண்ட கால பொருளாதார மாற்றத்தை தரக்கூடியது.

அதிகபட்சமாக 6 மாதம் வரை இந்த பண நெருக்கடி இருக்கலாம். அதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை நாம் காணப் போகிறோம்.ஜிஎஸ்டி வரிவிதிப்பும், ரூபாய் நோட்டு ரத்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் நோட்டுகள் விவகாரம் 50 நாளில் சரியாகிவிடும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?