பணமில்லா பரிவர்த்தனை – மோடி அதிரடியான 10 விளக்கங்கள்

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
பணமில்லா பரிவர்த்தனை – மோடி அதிரடியான 10 விளக்கங்கள்

சுருக்கம்

ஊழலையும் கறுப்பு பணத்தையும் ஒழிக்கும் நடவடிக்கையாக, பணமில்லா பரிவர்த்தனையில் இந்திய பொருளாதாரத்தின் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி விளக்கி உள்ளார். இது தொடர்பாக, 'லிங்கிடு இன்' தளத்தில் அவர் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் முக்கிய 10 அம்சங்கள்.

* 21-ம் நூற்றாண்டின் இந்தியாவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏழை, நடுத்தர மக்களின் கனவுகளை சீர்குலைப்பதுடன், ஊழலால் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது.

* ஊழலுக்கும் கறுப்பு பணத்துக்கும் மிகப் பெரிய அளவிலான ரொக்கம்தான் மகத்தான ஆதாரமாக விளங்குகிறது.

* 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என நவம்பர் 8ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு, ஊழலையும் கறுப்பு பணத்தையும் ஒழிப்பதற்கான இலக்குடன் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு.

* உங்கள் (நாட்டு மக்கள்) ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் நண்பர்களுக்கு நான் முன்வைப்பது என்னவென்றால், 'பணமில்லா பரிவர்த்தனை' என்ற மாற்றத்துக்கு தலைமையேற்று, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் தூண்டுகோளாகவும் இருங்கள்.

* பணமில்லா பரிவர்த்தனையே ஊழலும் கறுப்பு பணமும் இல்லாத வலுவான இந்தியாவுக்கு அடித்தளம்.

* நாம் இன்று மொபைல் பேங்கிங் - மொபைல் வாலட் காலத்தில் வாழ்கிறோம். உணவு வாங்குவது, பொருட்களை வாங்குவது - விற்பது, டாக்ஸி புக் செய்வது. இவை அனைத்துமே உங்களிடம் உள்ள செல்போனால் சாத்தியம் ஆகிறது. நம் வாழ்க்கையை வசதியானதாக விரைந்து செயல்படவும் தொழில்நுட்பம் உறுதுணைபுரிகிறது.

* உங்களில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இ-வாலட்களை தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள். ஆயினும், பணமில்லா பரிவர்த்தனையின் வழிமுறைகளையும் நன்மைகளையும் உங்களிடம் பகிர்வதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

* அரசின் நடவடிக்கையால், சிறு வணிகர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியை மென்மேலும் சிறப்பாக பயன்படுத்தி கொள்ளக் கூடிய தனித்துவமான சரித்திர வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

* நான் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடும்போது, பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாவர்கள் என்பது தெரியும். ஆனால், நீண்ட கால பலன்களுக்காக தற்காலிக சிரமத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கோருகிறேன். நாட்டின் எதிர்கால நலன் கருதி, நம் நாட்டு மக்கள் அனைவரும் தற்காலிக சிரமங்களை பொறுத்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

* நான் செல்லும் நகரங்களிலும் கிராமங்களிலும் (உ.பி, கர்நாடகம், கோவா மற்றும் பஞ்சாப்) "ஊழலும் கறுப்பு பணமும் ஒழிக்க வேண்டுமா?" என்று மக்களை நோக்கிக் கேட்கிறேன். அதற்கு, அவர்கள் ஒருமித்த குரலில் சொல்லும் ஒரே பதில், "ஆம்." இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?