இமாச்சலில் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் மாயம்

By SG Balan  |  First Published Feb 5, 2024, 8:30 AM IST

கார் விபத்துக்குள்ளானதில் இருந்து சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை என்றும் அவரை மீட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.


இமாச்சலப் பிரதேசத்தில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. காரின் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஆனால், வெற்றி துரைசாமியைக் காணவில்லை என்று இமாச்சல் போலீசார் கூறுகின்றனர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). இவர் காரில் இமாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அந்த மாநிலத்தின் கசாங் நாளாலா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த இன்னோவா கார் (கார் எண் HP01AA-1111) சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Tap to resize

Latest Videos

undefined

ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கார் ஓட்டுநர் தஞ்சின் தபோவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பம் வருமான வரி தாக்கலை சரிபார்க்க உதவுகிறது: மத்திய நேரடி வரி வாரிய தலைவர் தகவல்

வெற்றியுடன் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த திருப்பூரை சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று இமாச்சலப் பிரதேச காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மீட்கப்பட்ட கோபிநாத் திருப்பூரில் வெள்ளக்கோவிலை அடுத்த பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகன் என்றும் அவரது வயது 32 என்றும் போலீசார் கூறுகின்றனர்.

ஆனால், கார் விபத்துக்குள்ளானதில் இருந்து சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை என்றும் அவரை மீட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெண் பயணியிடம் கைவரிசை காட்டிய ஆசாமி

click me!