டெல்லிவாசிகளே 4 நாள் வீட்டுக்குள்ளயே கம்முன்னு கிடங்க..

By sathish kFirst Published Oct 28, 2018, 1:13 PM IST
Highlights

பி.எம்2.5 (PM2.5) என்பது காற்றிலுள்ள துகள் மாசுக்களின் அளவை குறிக்கும். 2.5 மைக்ரோ மீட்டர் (மைக்ரோ என்றால் மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) கொண்ட துகள்களின் எண்ணிக்கையை இது குறிக்கும். இந்த அளவில் காற்றில் இருக்கும் நுண்ணிய துகள்கள் நம் மூச்சில் எளிதில் கலந்து நுரையீரலில் போய் படிந்து பாதிப்பை உண்டாக்கக் கூடியவை. இந்த மனிதருக்கு ஆபத்தான பி.எம்.2.5 துகள்கள் தான் 36 சதவீதம் காற்றில் உள்ளதாம்.

ஜன்னல் கதவுகளை மூடிவையுங்க.. வாக்கிங் முடிஞ்சா போகாதீங்க.. வெளியே போகனும்னா முகமூடி போட்டுட்டு போங்க..
இப்படி வழக்கத்துக்கு விரோதமாக டெல்லி மக்களை பயமுறுத்துகிறது மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டுப் பிரிவின் காற்று மாசு அளவிடும் அமைப்பான சபர்(SAFAR).

டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளான குர்கான், நோய்டா, பரிசாபாத் போன்ற நகரங்களில் கடந்த 4 நாட்களாக காற்று மாசின் அளவு ஆபத்தான அளவில் இருப்பதாகவும், காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்க தகுதியில்லாததாக இருப்பதாகவும் உள்ளதால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு. வீட்டை விட்டு வெளியே செல்வதை முடிந்த அளவு தவிர்க்கும்படி மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் டீசல் ஜெனரேட்டர்களை மக்கள் உபயோகப்படுத்தாமல் இருக்க 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்க அரசை அறிவுறுத்தியுள்ளது.

நகரத்தினுள் நடைபெறும் கட்டுமானப் பணிகள், கல் உடைப்பு வேலைகள், நிலக்கரி மற்றும் பயோமாஸ் பொருட்களை கையாளும் நிறுவனங்கள் போன்ற மாசு அதிகம் உமிழும் ஆலைகளின் இயக்கத்தை நவ 1 முதல் 10ம் தேதி வரை நிறுத்தி வைக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது இந்த அமைப்பு. டெல்லிக்கு அருகிலுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் விளைச்சலுக்குப் பின் பதர்களை எரிப்பதால் உண்டான மாசு கடந்த இரண்டு நாட்களில் 36 சதவீதம் டெல்லியை பாதித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் அளவிட்டுள்ளது. 

பி.எம்2.5 (PM2.5) என்பது காற்றிலுள்ள துகள் மாசுக்களின் அளவை குறிக்கும். 2.5 மைக்ரோ மீட்டர் (மைக்ரோ என்றால் மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) கொண்ட துகள்களின் எண்ணிக்கையை இது குறிக்கும். இந்த அளவில் காற்றில் இருக்கும் நுண்ணிய துகள்கள் நம் மூச்சில் எளிதில் கலந்து நுரையீரலில் போய் படிந்து பாதிப்பை உண்டாக்கக் கூடியவை. இந்த மனிதருக்கு ஆபத்தான பி.எம்.2.5 துகள்கள் தான் 36 சதவீதம் காற்றில் உள்ளதாம்.

சபர் அமைப்பின் முன்னாள் இயக்குனர் டி.சாகா கூறுகையில், "இந்த அளவு ஆபத்தான காற்றுமாசைக் கண்டு நாம் ரொம்பவும் பயப்படத்தேவையில்லை. காற்றின் போக்கு மாறி சுழன்று வேகமாக காற்று வீசினால் இந்த மாசுகள் சிதறியடிக்கப்பட்டுவிடும் வாயப்பு இருக்கிறது" என்றார். 

காற்று டெல்லிவாசிகளுக்கு சார்பாக வீசுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
 
click me!