சபரிமலையில் முதன் முறையாக போலீஸ் தடியடி... ஆன்மீக பூமி போராட்ட பூமியானது!!!

Published : Oct 17, 2018, 04:25 PM ISTUpdated : Oct 17, 2018, 04:54 PM IST
சபரிமலையில் முதன் முறையாக போலீஸ் தடியடி... ஆன்மீக பூமி போராட்ட பூமியானது!!!

சுருக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களைத் தடுப்பவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். நிலக்கல் வழியாகத்தான் சபரிமலைக்கு செல்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களைத் தடுப்பவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். நிலக்கல் வழியாகத்தான் சபரிமலைக்கு செல்வார்கள். உச்சநீதிமன்றத்தின் அனுமதி அடுத்து, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் நடையைக் கட்டியுள்ளனர். 

நிலக்கல் மற்றும் பம்பை பகுதியில் இந்து அமைப்புகள் மற்றும் பெண்கள் ஆகியோர் திரண்டுள்ளனர். சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களை தடுப்பதற்காக அவர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். அதேபோல் சபரிமலைக்கு வரும் வாகனங்களை அவர்கள் சல்லடைப்போட்டு சலித்தனர். பெண்கள் யாராவது இருந்தால் அவர்களை கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வலுக்கட்டாயமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டும் வந்தனர். இந்த நிலையில், அந்த பகுதிகிக்கு ஆங்கில தொலைக்காட்சியைச் சேர்ந்த 3 பெண்கள் சென்றுள்ளனர். 

அவர்கள் வந்த வாகனத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். நிலக்கல் பகுதியில் இந்து அமைப்புகள் பல குவிந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறி லேசாக தடியடி நடத்தினர். 

ஐயப்ப சீசன் தொடங்கினாலே சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுநாள் வரை ஐயப்ப கோஷமே கேட்டு வந்தது. ஆனால் இன்றோ.... போலீஸ் தடியடி... பக்தர்கள் ஓட்டம்... என காட்சியளிக்கிறது. ஆன்மீக பூமியே போர்க்களமாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!