அக்.20-ல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது... வானிலை ஆய்வு மையம் !

By vinoth kumarFirst Published Oct 17, 2018, 4:02 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 20 ஆம் தேதியில் இருந்து துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 20 ஆம் தேதியில் இருந்து துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் 
வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் 
தற்போது மழை பெய்து வருகிறது. கிண்டி, திருவேற்காடு, ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், வரும் 20 ஆம் தேதி முதல் வடமேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடையும் சூழல் நிலவும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு ஏற்ற சாதகமான நிலை நிலவுகிறது.

தெற்கு தீபகற்பத்தில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு தற்போதுள்ள மழைப்பொழிவு தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கனமழை முதல் மிக கனமழையும், ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகள், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் இடியுடன் மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 5 செ.மீ.,ம், வால்பாறையில் 3 செ.மீ.,ம் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!