ஒரே நாளில் ஐயப்ப பக்தர்கள் 1500 பேர் கைது! கேரளாவில் பெரும் பதற்றம்!

Published : Oct 26, 2018, 11:26 AM IST
ஒரே நாளில் ஐயப்ப பக்தர்கள் 1500 பேர் கைது! கேரளாவில் பெரும் பதற்றம்!

சுருக்கம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்கள் 1500 பேரை ஒரே நாளில் கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்கள் 1500 பேரை ஒரே நாளில் கேரள போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதுமே உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆந்திரா, தமிழகம் மற்றும் கேராளாவைச் சேர்ந்த பெண்கள் கோவிலுக்கு வந்தனர். 

ஆனால் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் போலீசார் பெண்களை சன்னிதானம் வரை அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு பக்தர்கள் மனித அரண் அமைத்து எதிர்த்த காரணத்தினால் பெண்களால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. 18 படிகளை பெண்களை ஏறினால் உடனடியாக நடையை அடைக்கும் படி கோவிலின் தலைமை தந்திரிக்கு பந்தளம் அரண்மனை உத்தரவிட்டது. இதனால் பெண்கள் யாரும் கோவிலுக்குள் செல்லாமல் திரும்பினர். 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காதது கேரள அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பினரயி விஜயன் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க மறுத்து போராடிய அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சபரிமலையில் நிலக்கல், பம்மை மற்றும் சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் சுமார் 2000 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் புகைப்படங்கள் மாநிலத்தின் அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

நேற்று ஒரே நாளில் சுமார் 1500 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் போராட்டத்தை முன்னின்று நடத்திய 200 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களையும் கேரள போலீஸ் தேடி வருகிறது. ஐயப்ப பக்தர்களை கேரள போலீசார் துரத்தி துரத்தி கைது செய்வது கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!