
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் சுவாமி தரிசனத்திற்கு 8 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்ப்டடுள்ளதுசூழல் நிலவி வருகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை வழிபாடு முடிந்து, மகர ஜோதி வழிபாடு கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடைபெற உள்ள மகர ஜோதி வழிபாட்டிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அவர்களை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் திணறி வருகிறது.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் வரை காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. கோயில் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து விரைவாக செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் பம்பையில் இருந்து செல்லும் பக்தர்கள் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஏதுவாக போதுமான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வரிசையாக செல்லவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் வெளியே வந்த பிறகே, வெளியில் இருக்கும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.