ஒரு விமான டிக்கெட் 25 ஆயிரம்.. மணிப்பூரை விட்டு வெளியேறும் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த விமான நிறுவனங்கள்

By Raghupati RFirst Published May 8, 2023, 5:48 PM IST
Highlights

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இருந்து தப்பித்து வெளியூருக்கு செல்லும் மக்கள், விமான டிக்கெட்டை 25 ஆயிரத்துக்கு எடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் மேதே முதாய மக்கள் 53 சதவீதம் பேர் உள்ள நிலையில் எஸ்டி அந்தஸ்து கோரி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் இவர்கள் மனு தாக்கல் செய்தனர்.  இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்புமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  மேதே சமுதாய மக்களின் கோரிக்கைக்கு எம்.பி, எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.  

மணிப்பூர் மக்கள் தொகையில் 40 சதவீதமாக இருக்கும் நாகா மற்றும் குக்கி பழங்குடி பிரிவினர் இந்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரனை நடத்தப்பட்டது.  தர்பங்  பகுதியில் நடைபெற்ற பேரணியில் ஆயுதம் தாங்கிய கும்பல் மேதை சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது.  மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள் வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. மணிப்பூரை விட்டு மக்கள் வெளியேற தொடங்கியதால் இம்பால் - கொல்கத்தா மற்றும் இம்பால் - குவஹாத்தி வழித்தடங்களில் விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. சாதாரணமாக ரூ.2,500 ஆக இருக்கும் ஒரு வழி டிக்கெட்டுக்கு மக்கள் ரூ.25,000 வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுவாக, இம்பாலுக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே ஒருவழியாக பயணிப்பவருக்கு விமான கட்டணம் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை இருக்கும். இம்பாலில் இருந்து கவுகாத்தி செல்லும் விமானத்திற்கும் இதே கட்டணம் பொருந்தும். வான்வழி தூரத்தை நாம் கருத்தில் கொண்டால், இம்பாலில் இருந்து கொல்கத்தாவிற்கு 615 கிலோமீட்டர் தூரமும், இம்பாலில் இருந்து கவுகாத்திக்கு 269 கிலோமீட்டர் தூரமும் உள்ளது.

இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

ஆனால், மே 3ம் தேதி மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து, இம்பாலில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஒருவழிப் பயணத்திற்கு தற்போதைய கட்டணம் ரூ.12,000 முதல் ரூ.25,000 வரை உள்ளது. அதே நேரத்தில், இம்பாலில் இருந்து கவுகாத்தி செல்லும் விமானத்திற்கான ஒரு வழி டிக்கெட் கட்டணம் ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

MakeMyTrip போன்ற டிக்கெட் முன்பதிவு இணையதளங்களின்படி, இம்பாலில் இருந்து கொல்கத்தா மற்றும் இம்பாலில் இருந்து கவுகாத்திக்கு ஒரு வழி டிக்கெட் விலை மே 12 வரை ரூ 10,000 முதல் ரூ 15,000 வரை இருக்கும். இம்பால் மற்றும் கொல்கத்தா இடையே சில கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது மணிப்பூர் மெல்ல மெல்ல அமைதிக்கு திரும்பி வருகிறது. மக்கள் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கபட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். வன்முறை வெடித்ததால், மாநில அரசு இணைய சேவைகளை நிறுத்தி, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது, மேலும் பார்த்தாலே சுடும் உத்தரவுகளை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதையும் படிங்க..உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த மாதம் ரூ.436 எடுக்கப்படும்.. ஏன், எதற்கு தெரியுமா? முழு விபரம்

click me!