குஜராத்தில் பாஜக பிரமுகர் கோவிலுக்கு வெளியே சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்

By Raghupati R  |  First Published May 8, 2023, 4:56 PM IST

குஜராத்தில் உள்ள கோவிலுக்கு முன்னால் பாஜக பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி நகருக்கு அருகே உள்ள கோவிலில் இருந்து தனது மனைவி திரும்புவதற்காக தனது காரில் காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் உள்ளூர் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கொச்சர்வா கிராமத்தில் உள்ள ஷைலேஷ் படேலின் எஸ்யூவி கார் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் வந்து அவர் மீது 3 முதல் 4 முறை வரை சுட்டதாக துங்காரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

காலை 7.30 மணியளவில் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்புவதற்காக படேல் தனது வாகனத்தில் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனே படேல் வாபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மறுத்தவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து பாஜக தலைவர்கள், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபர்களை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். அப்பகுதியில் சில சாலைகள் மூடப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று போலீஸார் மேலும் தெரிவித்தனர். பாஜகவை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..எல்லாம் உஷாரா இருங்க.. மோச்சா புயல் வருது.. இந்திய வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை.!!

click me!