
கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன்பகவத், தேசியைக் கொடியேற்றிள்ளார். கேரள அரசின் எதிர்ப்பையும் மீறி, மோகன் பகவத் தேசியகொடி ஏற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வருடம் குடியரசு தினத்தன்று, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் தேசியகொடி ஏற்றினார். இது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளித்தது.
இந்த வருடம் கேரள அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே குடியரசு தினத்தன்று கொடியேற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற வேண்டும் என கூறப்பட்டிருட்நதது.
கேரள அரசின் இந்த உத்தரவுக்கு, பள்ளிகளுக்கு அனுப்பப்ட்டது. மேலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கொடியேற்றக் கூடாது என்று கேரள அரசு மறைமுகமாக தடைவிதித்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கேரள அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை நிராகரிப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியது. மேலும் திட்டமிட்டபடி தனியார் பள்ளியில் மோகன் பகவத் கொடியேற்றுவார் என்றும் அந்த அமைப்பு அறிவித்தது.
இந்த நிலையில் இன்று காலை பாலக்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் தேசியக்கொடியை மோகன் பகவத் ஏற்றி வைத்தார். குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதற்கான விதிகள் குறித்து கேரள அரசின் சுற்றறிக்கையை நிராகரித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேசியக்கொடியை ஏற்றிவைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மோகன் பகவத் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.