நிலமோசடி வழக்‍கு : சோனியாகாந்தி மருமகன் ராபர்ட் வத்ராவுக்‍கு புதிய சிக்‍கல்!

Asianet News Tamil  
Published : Dec 18, 2016, 03:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
நிலமோசடி வழக்‍கு : சோனியாகாந்தி மருமகன் ராபர்ட் வத்ராவுக்‍கு புதிய சிக்‍கல்!

சுருக்கம்

ராஜஸ்தான் மாநிலம் Bikaner நில பேர விவகாரம் தொடர்பாக, சோனியாகாந்தியின் மருமகன் Robert Vadra-வின் உதவியாளரிடம் அமலாக்‍கத்துறை விசாரணை நடத்தவுள்ளது. இதனால் Robert Vadra-வுக்‍கு புதிய சிக்‍கல் உருவாகியுள்ளது.

Robert Vadra-வுக்‍கு தொடர்புடைய Skylight Hospitality என்ற நிறுவனம் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் Bikaner-ல் 69 புள்ளி ஐந்து ஐந்து ஹெக்‍டேர் நிலத்தை வாங்கியது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசார் 18 நிலமோசடி வழக்‍குகளை பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அக்‍டோபர் மாதம் இந்த நிலம் தொடர்பான ஒதுக்‍கீடுகளை ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டது.

மேலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்‍கத்துறை விசாரணை மேற்கொண்டு, சோதனைகளையும் நடத்தியது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பாரதிய ஜனதா அரசு பொய்க்‍குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக Robert Vadra தெரிவித்தார்.

இந்நிலையில், விசாரணைக்‍கு ஆஜராகும்படி Skylight Hospitality நிறுவன ஊழியர் மகேஷ் நகாருக்‍கு அமலாக்‍கத்துறை  உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மகேஷ் தாக்‍கல் செய்த மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அமலாக்‍கத்துறை விசாரணைக்‍கு ஆஜராகும்படி மகேஷ் நகாருக்‍கு ஆணையிட்டது. இதனால் Robert Vadra-வுக்‍கு மேலும் சிக்‍கல் ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கனவு நனவாகுது! 2027 ஆகஸ்ட் 15-ல் சீறிப்பாயும் புல்லட் ரயில்.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது! வாழும்போதே கிரானைட் சமாதி கட்டிய துபாய் ரிட்டன் தாத்தா!