நின்றிருந்த லாரி மீது அசுர வேகத்தில் மோதிய ஆம்புலன்ஸ்... 4 விவசாயிகள் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

Published : Mar 20, 2019, 10:14 AM ISTUpdated : Mar 20, 2019, 10:15 AM IST
நின்றிருந்த லாரி மீது அசுர வேகத்தில் மோதிய ஆம்புலன்ஸ்... 4 விவசாயிகள் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

சுருக்கம்

ஆந்திராவில் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திராவில் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

ஆந்திராவின், நரசராவ்பேட்டையைச் சேர்ந்த 6 விவசாயிகள் நேற்று அதிகாலை குண்டூரில் இருந்து ரயிலில் டோன் ரயில் நிலையம் வந்தனர். பின்னர் அவ்வழியாக நோயாளியை இறக்கிவிட்டு வந்த ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏறி அனந்தப்பூருக்கு புறப்பட்டனர். வழியில் குட்டி அனந்தப்பூர் கிராமம் அருகே, திடீரென நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் அங்கு சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இறந்த 4 பேர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆம்புலன்சில் நோயாளிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டிய நிலையில் ஓட்டுநர் பயணிகளை ஏற்றிச்சென்றதாக போலீசார் கூறியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?
2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு