ஜம்மு காஷ்மீர் ரியாஸ் சாலை விபத்தில்15 பேர் பலி 30 பேர் காயம் - பிரதமர் மோடி இரங்கல்

 
Published : Oct 21, 2016, 10:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
ஜம்மு காஷ்மீர் ரியாஸ் சாலை விபத்தில்15 பேர் பலி 30 பேர் காயம் - பிரதமர் மோடி இரங்கல்

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் ரியாசில் ஏற்பட்ட சாலை விபத்தில்  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரதவிதமாக  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் பலியானர்கள் 30 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் பள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் துரதிருஷ்டவசமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்