"2018 வரை கோதுமை, அரிசி மானிய விலையில் வழங்கப்படும்" - மத்திய அரசு அடுத்த அறிவிப்பு!

 
Published : Aug 01, 2017, 04:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
"2018 வரை கோதுமை, அரிசி மானிய விலையில் வழங்கப்படும்" -  மத்திய அரசு அடுத்த அறிவிப்பு!

சுருக்கம்

rice and wheat will distribute for subsidy price says govt of india

நாட்டில் உள்ள 81 கோடி மக்களுக்கு 2018ம் ஆண்டு வரை ரேஷனில் கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், அரிசி 3 ரூபாய்க்கும் மானிய விலையில் வழங்கப்படும், விலை மறு ஆய்வு செய்யப்படாது என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது :

2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒருமுறையும் உணவு தானியங்களின் விலையை மறு ஆய்வு ெசய்வது அவசியம்.

ஆனால், 2018ம ஆண்டு வரை இதே விலையில் உணவுப் பொருட்களை வழங்கலாம் என் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரிசி கிலோ ரூ.3 க்கும், கோதுமை ரூ.2 க்கும், பருப்பு கிலோ ஒரு ரூபாய்க்கும் வழங்கப்படும்.

மத்திய அரசு தங்களால் இயன்ற திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்திவிட்டதால், மக்கள் பசியோடு இருக்காமல் உறுதி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விவி ராஜேஷ் மேயர்..! ஸ்ரீலேகா ஐபிஎஸ் துணை மேயர்.. திருவனந்தபுரம் பாஜக முடிவு
10 மீ. கூட வியூ இல்லை.. கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. 4 பேர் பலி, 25 பேர் படுகாயம்