Karnataka Opinion Poll: கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!!

By Narendran SFirst Published Mar 29, 2023, 10:57 PM IST
Highlights

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸுக்கு 115-127 இடங்களும், பாஜகவுக்கு 68-80 இடங்களும், ஜேடி(எஸ்) கட்சிக்கு 23-35 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, 50% பேர் பாஜக அரசு மோசமாகச் செயல்பட்டதாகக் கூறியுள்ளனர். 47% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்களில் பாஜக 11-15 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 15-19 இடங்கள் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  

பழைய மைசூர்: 

பழைய மைசூரு பகுதிகளில் உள்ள மொத்தம் 55 இடங்களில் காங்கிரஸ் 26 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 20% வாக்குகளும், காங்கிரஸுக்கு 36% வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜேடி(எஸ்) கட்சிக்கு 26-27 இடங்களும், காங்கிரஸுக்கு 24-28 இடங்களும் பாஜகவுக்கு 1-5 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய கர்நாடகா:

மத்திய கர்நாடகத்தில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புளதாக கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்திய கர்நாடகாவில் பாஜக 38% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 41% வாக்குகளையும் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. மொத்தமுள்ள 35 இடங்களில் பாஜக 12-16 இடங்களையும் காங்கிரஸ் 18-22 இடங்களையும் ஜேடி(எஸ்) 2 இடங்களையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பதற்கு சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு

கடலோர கர்நாடகா:

கடலோர கர்நாடகத்தில் பாஜக 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் பாஜக 46% வாக்குகளைப் பெறும் என்றும், காங்கிரஸ் 41% வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்குகளில் 6%க்கு மேல் ஜேடி(எஸ்) பெற வாய்ப்பில்லை. கர்நாடகாவின் மிகச்சிறிய பகுதி இது, வெறும் 21 இடங்கள் மட்டுமே உள்ளது. அதில் பாஜகவுக்கு 11 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 10 இடங்களை பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

மும்பை கர்நாடகா:

மும்பை கர்நாடகத்தில் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 இடங்களைக் கொண்ட மும்பை-கர்நாடகாவில், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தலா 43% வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் 25-29 இடங்களையும், பாஜக 21-25 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி!!

ஹைதராபாத் கர்நாடகா:

ஹைதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்-கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக முறையே 44% மற்றும் 37% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 31 இடங்களில் காங்கிரஸ் 21 இடங்களையும் பாஜக 10 இடங்களையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த கர்நாடகா: 

ஒட்டுமொத்த கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 121 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பாஜகவுக்கு 74 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!