
ரிசர்வ் வங்கி கவனர் உர்ஜித் படேல் கூறுகையில், “ நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழித்து, நம்பகத்தன்மையான, வெளிப்படையான பரிவர்த்தனை செய்வது மக்களின் கடமையாகும். இதற்காக பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதலில் அனைவருக்கும் வங்கிக்கணக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது, 2வதாக தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டமும், 3-வதாக சரக்கு மற்றும் சேவை வரியும் நிறைவேற்றப்பட்டது. மக்கள் முறையாக வரி செலுத்தும்போது, அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.
ஒருசிலர் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மூலம் வரிசெலுத்தாத கருப்புபணத்தை பதுக்குகிறார்கள். வரிசெலுத்தாமல் பணம், ரியல்எஸ்டேட்களில் முடங்கின. இதன்மூலம் கருப்பு பணம் பெருகியது. அதைத்தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துவருவதால், இருப்பு அளவு அதிகரித்து வருகிறது. அரசிடம் ஏராளமான கடன் பத்திரங்கள் உள்ளன. அவை மக்களுக்கு வழங்கப்படும் தேவைப்படும்போது மக்களுக்கு எளிதாக கடன்கிடைக்கும் வகையில் பணம் அளிக்கப்படும். விரைவில் சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும்'' என்று தெரிவித்தார்.