முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி பிரனாப்முகர்ஜி, மோடி பங்கேற்பு

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 12:00 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி பிரனாப்முகர்ஜி, மோடி பங்கேற்பு

சுருக்கம்

முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
பிரனாப்முகர்ஜி, மோடி பங்கேற்பு

டெல்லியில் குடியரசு தின நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற முப்படை வீரர்களின் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ந்தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

பாசறை திரும்பும் நிகழ்ச்சி

இதனையடுத்து குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் விதமாக நேற்று டெல்லியில் விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முப்படை பாசறை திரும்பும் இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி பங்கேற்றனர்.

அப்போது, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.

விஜய் சவுக் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண விளக்குகளால் கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டன. முன்னதாக நிகழ்ச்சிக்கு குதிரை பூட்டிய வண்டியில் ஜனாதிபதி வந்தார்.

இந்த நிகழ்ச்சி மாலை 4.45 மணியளவி தொடங்கியது. மொத்தம் ராணுவத்தை சேர்ந்த பல்வேறு இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

படை தலைவர் ஜெயச்சந்திரன் இந்த நிகழ்ச்சியை நடத்தினார். சுபேதார் மேஜர் ராணுவ பேண்ட் வாத்தியங்களை ஒருங்கிணைத்தார்.

PREV
click me!

Recommended Stories

ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!
பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!