கர்ப்பிணி பெண்ணை 6 கி.மீ சுமந்து சென்ற உறவினர்கள்...! 

 
Published : Jun 10, 2018, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
கர்ப்பிணி பெண்ணை 6 கி.மீ சுமந்து சென்ற உறவினர்கள்...! 

சுருக்கம்

Relatives who carried the pregnant woman

சாலை வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை 6 கிலோமீட்டர் தூரம் வரை அவரது உறவினர்களே சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் உள்ள அங்கூ கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள் திட்டமிட்டனர்.

108 ஆம்புலன்சுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். ஆனால், அந்த கிராமத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், அங்கூ கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வர முடியாது என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, கர்ப்பிணிப் பெண்ணை அவரது உறவினர்கள் சுமார் 6 கிலோ மீட்டருக்கு சுமந்து சென்றனர். குழந்தைக்கு தொட்டில் கட்டுவதுபோல், போர்வையால் மூங்கிலில் கட்டி கர்ப்பிணிப் பெண்ணை தோளில் சுமந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!
சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!