மத்திய அரசுடன் முற்றும் மோதல்... ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா?

By vinoth kumarFirst Published Nov 8, 2018, 12:26 PM IST
Highlights

வாராக் கடன் தொடர்பாக, சில பொதுத் துறை வங்கிகள் மீது எடுத்துள்ள கடும் நடவடிக்கையை குறைக்க என மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தி வருகிறது.

வாராக் கடன் தொடர்பாக, சில பொதுத் துறை வங்கிகள் மீது எடுத்துள்ள கடும் நடவடிக்கையை குறைக்க என மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தி வருகிறது.

அதற்கு உடன்படாததால், மத்திய அரசின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதையொட்டி, ரிசர்வ் வங்கியின் கவர்னர் வரும் 19ம் தேதி ராஜினாமா செய்வதாக தெரியவந்துள்ளது. 

வாராக் கடன் தொடர்பாக, சில பொதுத் துறை வங்கிகள் மீது எடுத்துள்ள கடும் நடவடிக்கையை குறைக்க என மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம், இதுபோன்ற வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாம் என்பது, மத்திய அரசின் யோசனை.

மேலும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில், வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தி, அவற்றின் சொத்து மதிப்பை அதிகரித்து, சந்தையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், மத்திய அரசு விரும்புகிறது. இந்த யோசனைகளை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. 

இதனால், ரிசர்வ் வங்கி இயக்குனர், உர்ஜித் படேல் மனஉளைச்சர் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வரும் 19ம் தேதி, நடைபெறும் ரிசர்வ் வங்கி இயக்குனர் கூட்டத்தில் அவர், தனது பதவியை ராஜினாமா  செய்வது குறித்து அறிவிப்பார் என தெரியவந்துள்ளது.

click me!