ரூ.500 நோட்டுகள் மாயமானது தொடர்பாக ஆர்டிஐ தகவல் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது
புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூ 88,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மாயமானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியான தகவல் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ஆர்டிஐ தகவல் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது கருவூலத்தில் வைத்திருக்க வேண்டிய ரூ.88,000 கோடி மதிப்புள்ள ரூ.500 நோட்டுகள் காணாமல் போனதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஐ ஆர்வலர் மனோரஞ்சன் ராய் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மூலம், பெங்களூரு, நாசிக் மற்றும் தேவாஸ் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அச்சகங்களில் ரூ.8,810.65 மில்லியன் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், அதில் ரூ.7,260 மில்லியன் நோட்டுகளை மட்டுமே ரிசர்வ் வங்கியின் கருவூலத்துக்கு சென்றுள்ளது. எஞ்சிய 1550.65 மில்லியன் ரூ.500 நோட்டுகள் அதாவது காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் வரை நாசிக் அச்சகத்தில் அச்சிடப்பட்ட 210 மில்லியன் மதிப்பிலான ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளை பெறவில்லை என்று ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டதாகவும் ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
அமித் ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள்: சுப்ரமணியன் சுவாமி!
இப்போது காணாமல் போன 1550.65 மில்லியன் மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் மற்றும் ஏற்கனவே பெறப்படாமல் இருக்கும் 210 மில்லியன் மதிப்பிலான ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளை சேர்த்தால், மொத்தத்தில் ரூ.88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் மாயமானதாகவும், அவை எங்கு இருக்கிறது என்பதற்கான எந்த தடயமும் இல்லை எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
Clarification on Banknote pic.twitter.com/PsATVk1hxw
— ReserveBankOfIndia (@RBI)
இந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் மாயமானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியான தகவல் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. மாயமானதாக வெளியான தகவல்களை மறுத்துள்ள ரிசர்வ் வங்கி, அச்சகங்களில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அனைத்து நோட்டுகளும் சரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆர்டிஐ தகவல் அச்சகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது எனவும், அந்த தகவல் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், அச்சடித்த பிறகு, நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி அதனை பொருத்தும் வலுவான அமைப்பு உள்ளதாகவும், இதனை கண்காணிப்பதற்கான அமைப்பும் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.