மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா! இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்!

Published : Jul 24, 2026, 09:34 PM IST
Ravneet Singh Bittu

சுருக்கம்

Ravneet Singh Bittu: நீட் தேர்வு சர்ச்சை, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு அழுத்தம் என மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு, 'Cockroach Janata Party' போராட்டம், சோனம் வாங்சுக் போராட்டம், எதிர்க்கட்சிகளின் அமளி என மத்திய அரசு அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒரே அமளி துமளியாக உள்ளது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழுத்தம் தீவிரமடைந்து வருகிறது. ஒருபக்கம், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே, ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணையமைச்சரான ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா செய்தது ஏன்?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ரவ்னீத் சிங் பிட்டு ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரவ்னீத் சிங் பிட்டு, பஞ்சாபின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதற்காகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Gen Z Movement: கரப்பன்பூச்சி கட்சி: ஜென் Z-ன் அரசியல் எழுச்சியா, வீழ்ச்சியா?

காங்கிரஸிலிருந்து பாஜக-வுக்கு வந்த தலைவர்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியந்த் சிங்கின் பேரன் தான் ரவ்னீத் சிங் பிட்டு. மக்களவைத் தேர்தலுக்கு சில காலத்திற்கு முன்புதான் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சர் பதவியை பாஜக வழங்கியது. தற்போது, பஞ்சாபில் தாமரையை மலர வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரவ்னீத் சிங் பிட்டுவை ராஜினாமா செய்ய வைத்து, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பை அவரிடம் வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மீது ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. மறுபுறம், காங்கிரஸ் கட்சி உள்கட்சிப் பூசல்களால் சிதறிக்கிடக்கிறது. எனவே, பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைக்க இதுவே சரியான நேரம் என்று கருதப்படுகிறது. இதற்காக, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த பல தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீஸ்! மூக்கில் ரத்தம் வழிந்ததா? பரபரப்பு தகவல்!

மோடி அமைச்சரவையில் மாற்றம்?

ரவ்னீத் சிங் பிட்டுவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படலாம் அல்லது விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் விடுத்த கோரிக்கையின்படி மத்திய கல்வி அமைச்சர் தர்மதேந்திர பிரதானும் மத்திய அரசின் உத்தரவுப்படி தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரவை மாற்றத்தின்போது, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும், சிலருக்கு அமைச்சர் பதவி பறிபோகலாம் என்றும் டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒருநாள் கல்யாணத்துக்கு ரூ.20 லட்சமா? பெங்களூரு பெண் போட்ட பதிவு வைரல்!
Indian Railways: சொம்பு தூக்கி ஓடிய பயணி.. கடுப்பாகி எழுதிய கடிதம்! ரயிலில் டாய்லெட் வந்த சுவாரஸ்ய வரலாறு!