மானியத்தைக் கூட மக்கள் பார்க்குமாறு எழுதி வேண்டுமாம்…ரேஷன் கடைகளுக்கு மத்திய அரசு உத்தரவு….

 
Published : Apr 13, 2017, 08:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
மானியத்தைக் கூட மக்கள் பார்க்குமாறு எழுதி வேண்டுமாம்…ரேஷன் கடைகளுக்கு மத்திய அரசு உத்தரவு….

சுருக்கம்

Ram vilas paswan

மானியத்தைக் கூட மக்கள் பார்க்குமாறு எழுதி வேண்டுமாம்…ரேஷன் கடைகளுக்கு மத்திய அரசு உத்தரவு….

பொது வழங்கல் முறையில்(பி.டி.எஸ்.) மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் உணவு தானியங்களின் விலையில் மத்திய அரசு அளிக்கும் மானியத்தை மக்கள் பார்க்குமாறு எழுதி வைக்க வேண்டும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் பார்க்கும் வகையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையை எழுதி வைக்க மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் மாநில அரசின் பங்கு, மத்திய அரசு அளிக்கும் மானியம் ஆகியவை குறித்து எழுதிபோட வேண்டும்.

உதாரணமாக, கோதுமையை கிலோ ஒன்று ரூ.24.09 காசுகளுக்கு கொள்முதல் செய்கிறது மத்தியஅரசு. அதை தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிலோ ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக 22ரூபாயை மத்திய அரசு மானியமாக அளிக்கிறது.

அரசியைப் பொருத்தவரை கிலோ ரூ.32.64 காசுகளுக்கு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு கிலோ 3 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் கிடைக்கச் செய்கிறது. மானியமாக மத்திய அரசு ரூ.29.64 காசுகளை அளிக்கிறது. ஆகவே,  இதில் மத்திய அரசின் மானியம், மாநில அரசின் விலை ஆகியவற்றை மக்கள் பார்க்குமாறு எழுதிவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!