ஜனாதிபதி ஆகிறார் ராம்நாத் கோவிந்த் - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
Published : Jul 20, 2017, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
ஜனாதிபதி ஆகிறார் ராம்நாத் கோவிந்த் - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சுருக்கம்

ram nath kovind the president of india

நாட்டின் 14 வது குடியரசு தலைவர் தேர்தலின் கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருவதால் அவரின் வெற்றி உறுதியானது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்தகுடியரசு தலைவருக்கான வாக்குப்பதிவு கடந்த 17 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது.14-வது குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இன்று காலை சுமார் 11 மணி முதல் குடியரசு தலைவருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கென்று தனித்தனியே வாக்கு மதிப்பீடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கடைசி கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.

இதில் ராம்நாத் கோவிந்த் எதிர்கட்சிகளின் மீராக்குமாரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருவதால் நாட்டின் 14 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்