Ambani's Antilia : நாளை அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக நடக்க உள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி அம்பானியின் ஆண்டிலியா, ராமரின் வரவை நினைவுகூரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய அந்த பிரம்மாண்ட வீடு மலர் கொத்துகளாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆண்டிலியாவின் மற்ற பகுதிகளும் ராமரை வரவேற்க அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு அழைக்கப்பட்ட இந்திய தொழில்துறையினரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிஎம்டி முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், பிரபல இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோர் அடங்குவர்.
One of Richest Man in World, Mukesh Ambani's house 'Antilia' is all decked up before Ram Lala's Pran Pratishtha pic.twitter.com/pPN8ZvQdbR
— Megh Updates 🚨™ (@MeghUpdates)Antilia சிறப்பு அம்சங்கள்
இது சுமார் 4,00,000 சதுர அடியில் பரவியுள்ளது. ஆண்டிலியாவில் 600 பணியாளர்கள் பணிபுரிகின்றனர் என்று கூறப்படுகிறது. இதில் 6 மாடிகள் கார் பார்க்கிங் செய்ய பிரத்தியேகமாக உள்ளது. Antiliaவில் ஒரு திரையரங்கம், 3 ஹெலிபேடுகள், தொங்கும் தோட்டங்கள் மற்றும் ஒரு ஐஸ்கிரீம் பார்லர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஸ்பா மற்றும் யோகா மையத்தையும் கொண்டுள்ளது. பூகம்பம் மற்றும் பிற இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.