
சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்்ஷாபந்தன் பண்டிகையின் போது, சகோதரிகளுக்கு ஸ்வீட், சாக்லேட்களை பரிசாகக் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை கான்பூரைச் சேர்ந்த வியாபாரி புதுவிதமான பரிசை தயாரித்துள்ளார்.
நாட்டில் உணவுப்பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, காய்கறிகளை பரிசாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் வெங்காயம், தக்காளி, உருலைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையை கருத்திக் கொண்டு அதையே பரிசுப் பொருட்களாக அந்த வியாபாரி தயாரித்துள்ளார்.
அதிலும், தக்காளி விலை கடந்த சில வாரங்களாக கிலோ ஒன்றுக்கு ரூ.100யை தொட்டது. இதனால், உத்தரப்பிரதேச மாநில பா.ஜனதா அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து, போராட்டம் நடத்தினர்.
சண்டிகரிலும் காய்கறி விலையை உயர்வை கண்டித்து, இதேபோல எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். தக்காளிகளை வங்கியில் 6 மாதம் டெபாசிட் செய்தால், 5 மடங்கு திரும்பப் பெறலாம். தக்காளிக்கு லாக்கர் வசதி, தக்காளியை அடகு வைத்தால் 80 சதவீதம் கடன் என்று கூறி காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான அரசு காய்கறிகளின் விலை உயர்வை தடுக்கத் தவறிவிட்டது எனக் கூறி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.