
ஸ்டேட் வங்கி தலைவராக இருக்கும் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் முடிவடைவதையடுத்து, ஸ்டேட் வங்கி தலைவராக ரஜ்னிஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவடைவதாக இருந்தது.
ஆனால் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கும் பணிகள் இருந்ததால் அருந்ததிக்கு ஓராண்டு காலம் பதவியை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து இந்த வாரத்தில் அவரது பதவிகாலம் முடிவடைகிறது. இதையடுத்து அந்த பதவிக்கு ரஜ்னிஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பதவிக்காலம் 3 வருடங்கள் ஆகும். தற்போது அவர் ஸ்டேட் வங்கியில் மேலாண் இயக்குநராக உள்ளார்.