
நடிகர் ரஜினி காந்த், அவரின் நண்பர்கள் சேர்ந்து இமயமலையில் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு ஆசிரமத்தை சத்தமில்லாமல் கட்டி வருகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
‘யோகியின் சுயசரிதையை’ எழுதிய எழுத்தாளர் பரமஹன்ச யோகானந்தா நிறுவிய ‘இந்திய சாஸ்தாங்க சமூகத்தின்’ 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆசிரமம் கட்டப்பட்டு வருகிறது.
இமயமலையில் உள்ள துனாகரி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகைக்கு ஆண்டு தோறும் செல்லும் நடிகர் ரஜினி காந்த் அங்கு தியானம் செய்வது வழக்கம். அந்த குகையில்தான் யோகி மகாவீர் பாபாஜி தியானம் செய்து அடங்கினார் என்பதால் அங்குரஜினி காந்த் தீவிர தியானத்தில் ஈடுபடுவார்.
இந்நிலையில், நடிகர் ரஜினி காந்தும், அவரின் நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்த மலைப்பகுதியில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு ஆசிரமத்தை அமைத்து வருகின்றனர்.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், ரஜினி காந்தின் நண்பருமான வி விஸ்வநாதன் கூறுகையில், “ நடிகர்ரஜினி காந்தி தியானம் செய்யும் குகைக்கு அருகே அந்த ஆசிரமம் கட்டப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினியும், அவரின் நெருங்கிய நண்பர்களும் இதற்கான செலவை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏறக்குறைய ரூ. ஒரு கோடி செலவில் அமையும் இந்த ஆசிரமம் நவம்பர் மாதத்தில் திறக்கப்படும். அதன்பின், அங்கு செல்லும் பக்தர்கள் கட்டணமின்றி தங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்
நான், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வி.எஸ். ஹரி, டெல்லியைச் சேர்ந்த ஸ்ரீதர் ராவ் ஆகியோர் கடந்த 2002ம் ஆண்டில் அந்த குகையில் ரஜினி காந்தை சந்தித்தோம்.இந்திய சாஸ்தாங்க சமூகத்தின் 100-வது ஆண்டு விழா வருவதையொட்டி அதற்கு வழங்க சிறந்த பரிசார இந்த ஆசிரமம் அமையும் ’’ எனத் தெரிவித்தார்.