ராஜஸ்தான் முதலமைச்சர் யார்? உச்சக்கட்ட குழப்பத்தில் காங்கிரஸ்!

By vinoth kumarFirst Published Dec 14, 2018, 9:44 AM IST
Highlights

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி ஜெய்ப்பூர் சென்றுள்ள மேலிட பார்வையாளர்கள், புதிதாக தேர்வான எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் உரிமை காங்கிரஸ் மேலிடத்தில் உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனால், முதல்வர் பதவிக்கான போட்டியில் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 பேரும் டெல்லி சென்று ராகுல் காந்தி மற்றும்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அங்கு முதல்வர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, ராகுல், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். மேலும் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ராஜஸ்தானில் ஆட்சியமைக்க தீவிரமாக உழைத்த சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்காக ராஜஸ்தானில், பல இடங்களில் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அசோக் கெலாட் கூறுகையில், விரைவில் முடிவு எடுக்கப்படும். 3 மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்ய வேண்டியுள்ளதால் முடிவு தாமதமாவது இயற்கை. கட்சி தலைவர் விரைவில் முடிவை அறிவிப்பார். தொண்டர்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். 

கடுமையாக உழைத்த தொண்டர்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்கப்படும். அனைத்து தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தி வருகிறார் என கூறினார். அதே நேரத்தில் சச்சின் பைலட் கூறுகையில், தொண்டர்கள் அமைதியை கடைபிடிப்பதுடன் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தலைமை மீது முழு நம்பிக்கை உள்ளது. சோனியா, ராகுல் எடுக்கும் முடிவை நாம் முழுமனதுடன் வரவேற்க வேண்டும். கட்சியின் பெருமையையும் ஒற்றுமையையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை என்றார்.

click me!