அரசு மருத்துவமனையில் பயங்கரம்... பிரசவத்தின் போது இரண்டு துண்டான பச்சிளம் குழந்தை...!

Published : Jan 12, 2019, 03:54 PM IST
அரசு மருத்துவமனையில் பயங்கரம்... பிரசவத்தின் போது இரண்டு துண்டான பச்சிளம் குழந்தை...!

சுருக்கம்

ராஜஸ்தானில் பெண்ணுக்கு போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ் ஒருவர், வேகமாக பிடித்து இழுத்ததில் குழந்தையின் தலை துண்டாகி உடல் மட்டுமே வெளியே வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானில் பெண்ணுக்கு போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ் ஒருவர், வேகமாக பிடித்து இழுத்ததில் குழந்தையின் தலை துண்டாகி உடல் மட்டுமே வெளியே வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு, கடந்த வாரம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் வேர் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆண் நர்ஸ் ஒருவரும், உதவியாளரும் மட்டுமே இருந்தனர். டாக்டர்கள் யாருமில்லை. போதையில் இருந்த அந்த ஆண் நர்ஸ், கர்ப்பிணிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். 

ஆனால், பிரசவத்தின் போது குழந்தையை பலமாக பிடித்து வெளியே இழுத்ததில், உடல் வேறு தலை வேறாகி விட்டது. குழந்தையின் தலை, கருப்பையிலேயே தங்கி விட்டது. உடல் மட்டுமே வெளியே வந்து துடித்தது. இதை பார்த்து பதறிப்போன ஆண் நர்சும், உதவியாளரும் அந்த சம்பவத்தை அப்படியே மூடி மறைத்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பெண்ணும் மயக்கமாகி விட்டார். 

குழந்தையின் உடலை பிணவறைக்கு எடுத்துச் சென்று மறைத்து விட்ட ஆண் நர்ஸ், ‘பிரசவம் மிகவும் சிக்கலாக இருக்கிறது. அவரை உடனடியாக ஜோத்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுங்கள்’ என்று பெண்ணின் கணவரிடம் கூறினார். உடனே, அவரும் மயக்கத்தில் கிடந்த தனது மனைவியை வாகனத்தில் தூக்கிச் சென்று ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அப்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், கருப்பையில் குழந்தையின் தலை மட்டுமே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே அறுவை சிகிச்சை மூலம்  குழந்தையின் தலையை வெளியே எடுத்தனர். இதுபற்றி போலீசில் பெண்ணின் கணவர் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். உதவிய மற்றொரு செவிலியர் தலைமறைவாகி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்