அரசு ஊழியர்கள் கள்ளக்காதலில் ஈடுபடலாம் !! உயர்நீதிமன்றம் என்ன சொல்லுது தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Mar 18, 2019, 7:26 PM IST
Highlights

கள்ள உறவு வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ராஜஸ்தான் உயர்நிதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்சசியின் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரிக்கும், ஒரு ஆண் போலீஸ் அதிகாரிக்கும் இடையே கள்ள உறவு இருந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து இருவரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை நீதிபதி சர்மா முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் தான் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடியாக ஒரு தீர்ப்பு அளித்துள்ளார். அதில் கள்ள உறவு வைத்துள்ளனர் என்பதற்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என தீர்ப்பளித்தார்.

இவர்களின் கள்ள உறவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என தெரிவித்தார்.

எது முறைகேடான வாழ்க்கை என்பது விவாதத்துக்குட்பட்ட கேள்வி, தகாத உறவு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் மனுதார்கள் மீது தகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு  தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

click me!