அதுல் சுபாஷ் தற்கொலைக்கு மத்தியில், ராஜஸ்தான் மருத்துவர் தற்கொலை! மனைவியின் துன்புறுத்தல் காரணமா?

Published : Dec 13, 2024, 08:43 AM ISTUpdated : Dec 13, 2024, 12:21 PM IST
அதுல் சுபாஷ் தற்கொலைக்கு மத்தியில், ராஜஸ்தான் மருத்துவர் தற்கொலை! மனைவியின் துன்புறுத்தல் காரணமா?

சுருக்கம்

பெங்களூருவில் தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைப் போலவே, ராஜஸ்தானின் ஜோத்பூரில் மனைவியின் துன்புறுத்தல் காரணமாக மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மன உளைச்சல் காரணமாக ஆயுர்வேத பல்கலைக்கழக மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் அறையில் இருந்து மனைவி குறித்த குறிப்புகள் அடங்கிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடித்தத்தில் தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோத்பூரில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த டாக்டர் அஜய் குமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதன்கிழமை காலை அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தனர். பதற்றமடைந்த அவர்கள் அவரது நண்பர்களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் அஜய் குமாரின் வீட்டிற்கு விரைந்தனர். டாக்டர் அஜய் அவர்கள் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டியும் பதிலளிக்காததால், அவரது நண்பர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனர். உடனடியாக இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அரசியலமைப்பு தின விவாதம்!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாக்டர் அஜய், ஜோத்பூரில் ஹோமியோபதி உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்ததாக காவல் நிலைய அதிகாரி விக்ரம் சிங் தெரிவித்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவரது மனைவி சுமன் குறித்த அவதூறான வார்த்தைகள் அடங்கிய கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

டாக்டர் அஜயின் மனைவி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நீண்ட காலமாக சுமன் அஜயை மனரீதியாக துன்புறுத்தி வந்ததால் அஜய் இந்த முடிவை எடுத்ததாக அஜயின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்ப்புக்கு மத்தியில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முன்னதாக பெங்களூருவில் தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுல் (34) தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி 24 பக்க தற்கொலைக் குறிப்பையும் 81 நிமிட வீடியோவையும் பதிவிட்டிருந்தார். இந்த நாட்டில் பெண்களுக்கு ஒரு நீதி எனவும், ஆண்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் ஜவுன்பூரில் அவரின் விவாகரத்து மற்றும் குழந்தைப் பராமரிப்பு வழக்கு விசாரணையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!