ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட் பதவியேற்றார்!

By vinoth kumarFirst Published Dec 17, 2018, 12:19 PM IST
Highlights

ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெல்லாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றுக் கொண்டனர். 

ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெல்லாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றுக் கொண்டனர். 

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றிக் கொடியை நாட்டியது காங்கிரஸ்.
ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு அசோக் கெல்லாட்டுக்கும் சச்சின் பைலட்டுகும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சச்சின் பைலட் முதல்வராக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைமை அசோக் கெல்லாட்டை தேர்வு செய்தது. துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டார். அவர்கள் சற்றுமுன், ஜெயப்பூர் ஆல்பர்ட் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றனர். இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

கூட்டணிக்கட்சி தலைவர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாயவதி இந்த விழாவில் பங்கேற்கவில்லை. துணை முதல்வராக பதவியேற்கும் சச்சின் பைலட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கூடுதலாக நிதித்துறை அல்லது உள்துறை இலாகா ஒதுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

click me!