Rajasthan : ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் நான்கு வயது சிறுமியை காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு வெளியே மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் அந்த காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட கிராம மக்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்துள்ளனர். தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங், அந்த சிறுமியை தனது அறைக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் பஜ்ரங் சிங் தெரிவித்தார்.
"அருகில் வசிக்கும் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பூபேந்திரா என அடையாளம் காணப்பட்ட அந்த எஸ்.ஐ. மீது ராகுவாஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மைனர் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது என்றும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். திரு சிங் கூறினார்.
சிறுமி குறிக தகவல் பரவியதையடுத்து, ராகுவாஸ் காவல் நிலையத்தை சுற்றி ஏராளமான கிராம மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் போலீசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் பூபேந்திர சிங்கையும் அடித்து உதைத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் பலர் தாக்கியதில் அந்த போலீஸ்கரர் பலமாக தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பாஜக எம்பி கிரோடி லால் மீனா, “லால்சோட்டில் ஏழு வயது தலித் சிறுமியை போலீஸ்காரர் பலாத்காரம் செய்த சம்பவம் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அப்பாவி குழந்தைக்கு நீதி கிடைக்கும்" என்று அவர் கூறினார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பாஜக எம்பி அறிவித்துள்ளார்.
"நான் சிறுமிக்கு உதவுவதற்காக இங்கு வந்துள்ளேன். சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். என்னைப் பொறுத்தவரை, தேர்தல் அதன் பிறகு வரும், குடும்பத்திற்கு நீதி வழங்குவதே எனது முதல் முன்னுரிமை. இது வெட்கக்கேடான சம்பவம்" என்று திரு. மீனா கூறினார்.