இராஜராஜ சோழ மன்னனின் 1031-வது ஆண்டு சதய விழா : நாளை முதல் 2 நாட்களுக்‍கு கொண்டாட்டம்!

First Published Nov 8, 2016, 8:18 AM IST
Highlights


உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக்‍ கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1031-வது ஆண்டு சதய விழா, நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறவுள்ளது. 

ஆயிரம் ஆண்டுகளுக்‍கு முன்பு பெரிய கோயிலை உருவாக்‍கி, தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்தவர் மாமன்னன் இராஜராஜ சோழன். அவரை கவுரவிக்‍கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதன்படி, வரும் 9-ம் தேதி சதய விழா கொண்டாடப்படுகிறது. இராஜராஜ சோழன் முடிசூடி 1031-வது ஆண்டு பிறப்பதால், அன்றைய தினம் அவரது சதய விழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவை நாளை முதல் 2 நாட்களுக்‍கு கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனை முன்னிட்டு, இராஜராஜ சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையில், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நிகழ்ச்சி, தேவார இன்னிசை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

முக்‍கிய நிகழ்வாக, தமிழக   அரசின் சார்பில், 9-ம் தேதி சதய நட்சத்திரத்தையொட்டி இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்‍கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். அன்றைய தினம், தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது. 

click me!