டிக்கெட் எடுக்கலான இவ்வளவு ரூபாய் அபராதமா ??? உஷார் மக்களே ..

Published : Aug 27, 2019, 12:49 PM ISTUpdated : Aug 27, 2019, 12:50 PM IST
டிக்கெட் எடுக்கலான இவ்வளவு ரூபாய் அபராதமா  ??? உஷார் மக்களே ..

சுருக்கம்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடம் வசூல் செய்த அபராத தொகை எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது .

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை சிலர் வாடிக்கையாக கொண்டிருப்பார்கள் . இதனால் டிக்கெட் பரிசோதகர்கள் ரயில் நிலையங்களில் சோதனை செய்து டிக்கெட் இல்லாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதிப்பது வழக்கம் .

இப்படி ரயில்வே துறை மூலமாக வசூலிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார் . அதற்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்து இருக்கிறது .

அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார்  ரூ.1,377 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ரயில்வே துறை . 2016-2017  ஆண்டில் ரூ.405 கோடியே 30 லட்சமும்  , 2017-2018-ம் ஆண்டில் ரூ.441 கோடியே 62 லட்சமும் , 2018-2019-ம் ஆண்டில் ரூ.530 கோடியே 6 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

2018 ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி வரையிலும் சுமார் 89 லட்சம் பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து அபராதம் செலுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது .

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!