ஒரே நேரத்தில் 110 இடங்களில் ரெய்டு..! சிபிஐ அதிரடி..!

Published : Jul 09, 2019, 03:35 PM IST
ஒரே நேரத்தில் 110 இடங்களில் ரெய்டு..! சிபிஐ அதிரடி..!

சுருக்கம்

இந்தியா முழுக்க,13 நிறுவனங்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ அத்தியகாரிகள் மேற்கொண்ட ஆய்வில ரூ.1139 கோடி அளவிற்கு வங்கி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நேரத்தில் 110 இடங்களில் ரெய்டு..! சிபிஐ அதிரடி..! 

இந்தியா முழுக்க,13 நிறுவனங்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ அத்தியகாரிகள் மேற்கொண்ட ஆய்வில ரூ.1139 கோடி அளவிற்கு வங்கி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்திய அளவில் நடைபெறும் இந்த ரெய்டு மிக பெரிய அளவிலான  ரெய்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லா தெரிவிக்கும் போது, "9 மாநிலங்கள் 110 இடங்களில் திடீரென இன்று மேற்கொள்ளபட்ட சிபிஐ சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு நடவடிக்கையின் கீழ், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதன் படி, ஆயுத கடத்தல், ஊழல் கிரிமினல் என 30 கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. 

தற்போது ரெய்டு நடந்து வரும் 110 இடங்களில் மதுரையும் உள்ளடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு  முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை உறுதிப்படுத்த இந்த ரெய்டு திடீரென நடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!