நாட்டின் நலனுக்காக எதையும் எதிர்கொள்ள நான் தயார்..! ராகுல் காந்தி டுவீட்

By karthikeyan V  |  First Published Mar 24, 2023, 6:04 PM IST

நாட்டின் நலனுக்காக எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள தயார் என்று ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார்.
 


பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததன் விளைவாக, எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ராகுல் காந்தி.

எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் பொதுவாக இருக்கிறது என்று ராகுல் காந்தி 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தார். எனவே அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

Explained : அடுத்த பிளான்.!! ராகுல் காந்தியின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்.?

ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, வயநாடு மக்களவை தொகுதி எம்பி-யான ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் அறிவித்தார். ராகுல் காந்தி மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

எம்.பி பதவி காலி.. 8 ஆண்டுகள் வரை ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாதா? என்ன சொல்கிறது சட்டம்?

இந்த விவகாரங்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சட்டரீதியாக எதிர்கொள்ள ராகுல் காந்தி தயாராகிவருகிறார். இந்நிலையில், நாட்டின் நலனுக்காக எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார். 
 

मैं भारत की आवाज़ के लिए लड़ रहा हूं।

मैं हर कीमत चुकाने को तैयार हूं।

— Rahul Gandhi (@RahulGandhi)
click me!